தேசிய விருதுபெற்ற பாடகியின் மறைவு கவலையளிக்கிறது- வைரமுத்து உருக்கம்! - Seithipunal
Seithipunal


இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல்வேறு பாடல்களை பாடி உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். 

47 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவிற்கு திரை துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேசிய விருது பெற்ற பாடகி பவதாரிணியின் மறைவு அதிர்ச்சியும் கவலையையும் தருகிறது. துயரப்படும் உள்ளங்களுக்கு எல்லாம் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuthu condolences Bavatharani   


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->