மாரி செல்வராஜ், பா ரஞ்சித் படங்கள் சாதிய வன்மத்தை தூண்டுகிறதா? வைரமுத்து பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்தாவது, "சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருத்தினால் போதும்.

அதற்கு மேல் அதை இழிவு கொடுக்க வேண்டாம், பெருமை கொடுக்க வேண்டாம். எல்லா சமூகங்களுக்கும் எல்லா பெருமைகளும் இருக்கின்றது.

கல்வியிலும், வீரத்திலும், தியாகத்திலும், உழைப்பிலும், தொழில்நுட்பத்திலும் எல்லா சமூக மக்களும் மேலே ஏறி வருகின்ற போதுதான், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறும்.

எனவே சாதி என்ற மாய பிம்பத்தை கடந்து, கல்வி, அறிவு, பகுத்தறிவு, உழைப்பு, சம வாய்ப்பு என்ற தளங்களில் முன்னேற வேண்டும் என்பதை இந்த நேரத்தில் என்னுடைய கோரிக்கையாக வைத்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் சாதியை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படுவதில்லை. ஒரு சாதியை வலியுறுத்தி எடுக்கின்ற படம் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை. எல்லா சாதி மக்களும் ஒரு திரைப்படத்தை பார்த்தால் தான் அந்த திரைப்படம் வெற்றி பெறும்.

ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் எடுக்கப்படுகின்ற படம், அந்த குறிப்பிட்ட சாதி மக்களின் எண்ணிக்கையில் நின்று போகும்.

அதனால் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறவர்கள், இயக்குகிறவர்கள், நடிக்கிறவர்கள் யாரும், ஒரு குறிப்பிட்ட சாதிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதில்லை.

ஆனால், அந்த குறிப்பிட்ட சமூகத்தின் சம்பவங்களை அவர்கள் மையப்படுத்துகிறார்கள் என்று மட்டும் புரிந்து கொண்டால் சாதி அங்கே தலை தூக்காது.

திராவிட அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்பில் இவ்வளவு முனைப்பு காட்டாவிட்டால், தமிழகத்தில் இந்த அளவுக்கு கூட முன்னேற்றம் வந்திருக்காது.

போதுமான அளவு இன்னும் சாதி ஒழிப்பில் நாம் வெற்றி பெறவில்லை என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, சாதி ஒழிப்பில் முனையவில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர், கல்பனா ஐயர் என சாதியை தன் பெயருக்கு பின்னால் இட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதியை இட்டுக் கொண்டது உண்டா? இது பெண்ணுரிமையும், பெண் கல்வியும் முன்னேறிய நாட்டினுடையதாக புரிந்துகொள்கிறேன்.

இன்னும் சாதியை ஒழிக்க வேண்டிய இடத்தில் இன்னும் முனைய வேண்டி இருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டால் போதும் நன்றி" என்று தெரிவித்தார்.

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் இயக்குகின்ற படங்கள் சாதிய வன்மத்தை தூண்டுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து, குறிப்பிட்ட தனி நபர்களை சுட்டிக் காட்ட வேண்டாம் என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuthu say about maari and ranjith movies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->