வலிமை பட ரிலீஸ் ஒத்திவைப்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருவதால் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valimai movie postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->