வலிமை பட ஒத்திவைப்பு.. படக்குழுனர் போட்ட மாஸ்டர் ப்ளான்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள், சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில், தமிழகத்தில் தற்போது ஊரடங்கின் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் ரிலீஸாக தாமதமாக உள்ளதால் மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்காரணமாக, வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valimai release in 5 language


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->