வணங்கான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு.....ரிலீஸ் எப்போது? - Seithipunal
Seithipunal


நடிகர் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தை, இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த  படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையேயே  கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகியாது.

இதில், அதிரடியான சண்டைக்காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன.  நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanagan Censorship Certificate Released when will it be released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->