''வணங்கான்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாலா இயக்கத்தின் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வணங்கான்''. இந்த திரைப்படத்தில் ரோகினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மிஷ்கின் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளன. மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்பத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanangan Movie Release Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->