வெளியானது வணங்கான் படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்தப் படத்தில் இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், அருண் விஜயை செய்யாத கொலைக்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் இந்த டிரெய்லரின் இறுதியில் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanangan movie trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->