விஜய்யின் 'வாரிசு' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது.? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார் இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இதனையடுத்து வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், வாரிசு திரைப்படம் சீரியல் போல இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

விமர்சன ரீதியாக வாரிசு திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie OTT release on February 22 in Amazon prime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->