பொங்கல் ரேசில் இருந்து வாரிசு விலகுகிறதா? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


அஜித் குமார் நடிக்கும் துணிவு திரைப்படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியாகின. 8 ஆண்டுகளுக்கு பின்பு இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் ஏற்படுத்தியது. 

வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சாம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் மூன்றாவது திரைப்படமாக துணிவு அமைந்துள்ளது. துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்த நிலையில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது சந்தேகம் என தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. வாரிசு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடாமல் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படத்தின் தமிழகத்திற்கான விநியோகம் இன்னும் முடிவாகாததால் இத்தகைய முடிவு எடுக்கக் கூடும் என சினிமா வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie will not be released for Pongal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->