நகுல் நடிப்பில் ''வாஸ்கோடகாமா'' ரிலீஸ் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் நகுல் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நகுல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் நகுல் நடிப்பில் ''எரியும் கண்ணாடி'' மற்றும் ''வாஸ்கோடகாமா'' என இரண்டு திரைப்படங்கள் உருவாகி நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கின்றன. 

இதற்கிடையே நகுல் பாலாஜி இயக்கத்தில் 'தி டார்க் ஹெவன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ''வாஸ்கோடகாமா'' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vascotakama movie Release Update


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->