சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும் - இயக்குநர் சங்கர் விடுத்த எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


அனுமதியின்றி ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இயக்குநர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இயக்குநர் ஷங்கர் இந்தியன் -3 பாகத்திற்கு பிறகு, சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். 

இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில், அண்மையில் வெளியான ஒரு படத்தின் டிரைலரில், ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலின் மிக முக்கியமான பகுதி இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. அது தேவாரா, கங்குவாவா அல்லது ரஜினியின் வேட்டையன் படத்தின் டிரைலர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இயக்குநர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அனைவரின் கவனத்திற்கு... பலரும் சு. வெங்கடேசனின் நாவலான ’வீரயுக நாயகன் வேள்பாரி’யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன்.

நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்” என இயக்குனர் ஷங்கர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Velpaari Copyright shankar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->