விஜய் ரசிகர்களே ரெடியா.. தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்.!
Venkat Prabhu and Vijay movie update on tomorrow 11AM
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ மடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 68வது திரைப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி, இந்த படத்தின் இயக்குனர் வெங்கப்ப பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் 11 காலை மணி காத்திருக்கவும் என்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தளபதி 68 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
English Summary
Venkat Prabhu and Vijay movie update on tomorrow 11AM