நடிகர் அஜித்தின் விடாமுயற்சி வெளியீடு! செம்ம அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விட முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தடையரத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அர்ஜுன், ஆரவ், நடிகை திரிஷா, ரெஜினா நடிக்கும் இந்த விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு உரிமத்தை நெட்ப்ளக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வந்த பிறகு, நெட்ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vidamuyarchi OTT Release Netflix


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->