வைரல்... ''விடுதலை 2'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கி வருகிறது. விடுதலை 2 படத்தின் காட்சிகளும் படபிடிப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரி, விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

விடுதலை 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக மஞ்சு வாரியார் நடிப்பதாகவும் இதில் டி ஏ ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் விடுதலை 2 திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன் படி, ''விடுதலை 2'' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai 2 movie First look poster


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->