சேலைக்கும் ,பணத்திற்கும் உங்கள் வாக்கை விற்றுவிடாதீர்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!  - Seithipunal
Seithipunal


 பாஜகவினர் உங்களுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் அது உங்கள் பணம் என்றும் ஆனால், உங்கள் வாக்கை ரூ.1,100 பணத்திற்கோ, சேலைக்கோ விற்றுவிடாதீர்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

தலைநகர் டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.மேலும்  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. அங்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பாஜக பணம், நகை, சேலைகளை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அதேவேளையில் , உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது என்றும் அதை ரூ.1,100க்கு விற்றுவிடாதீர்கள் என்று வாக்காளர்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பாஜகவினர் உங்களுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் அது உங்கள் பணம் என்றும் ஆனால், உங்கள் வாக்கை ரூ.1,100 பணத்திற்கோ, சேலைக்கோ விற்றுவிடாதீர்கள் என்றும்  உங்கள் வாக்கு விலைமதிப்பற்றது என கூறியுள்ளார் . மேலும் தொடர்ந்து பேசிய அவர் ,உங்கள் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டால் நமது ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும் என்றும்  அது செல்வந்தர்கள் ஆள வழிவகுத்துவிடும் என குறிப்பிட்ட அவர்  யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால், பணம் கொடுக்கும் நபர்களுக்கு வாக்களிக்காதீர்கள்' என மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't sell your vote for saree and money: Arvind Kejriwal 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->