விக்னேஷ் சிவனையே மிரளவிட்ட யூட்யூபர்.! அவரே சொன்ன சம்பவம்.! - Seithipunal
Seithipunal



சமீப கால தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக விளங்கி வருபவர் விக்னேஷ் சிவன். இவர் 2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார்  நடிப்பில் உருவான போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக பட வாய்ப்புகளில்லாமல் இருந்த விக்னேஷ் சிவன் 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நானும் ரௌடி தான்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் அவரது திரை வாழ்க்கைக்கு மிகவும் முக்கிய படமாக அமைந்ததோடு  அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நயன்தாராவை காதலிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை  நடிகர் சூர்யாவை வைத்து இயக்கினார்  மேலும் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் நடிப்பில்  வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படமும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூட்யூப் நிகழ்வின் போது விக்னேஷ் சிவனும் பிரபல  யூட்யூப் விமர்சகர் பிரசாந்தும் சந்தித்து பேசிக்கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய விக்னேஷ் சிவன் "தன்னுடைய சினிமா வாழ்வின் ஆரம்ப காலகட்டங்களில் இருக்கும் போது பிரசாந்தின்  திரைவிமர்சனங்களை கண்டு தான் மிகவும் பயந்ததாக தெரிவித்தார். நேர்மையாக விமர்சனம் செய்யக்கூடிய பிரசாந்த் எந்த விஷயமாக இருந்தாலும் அதை  உள்ளபடியே கூறி விடுவார் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இவர்களது பேட்டி தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh shivan explains why he afraid about youtube movie reviewers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->