புளுசட்டை மாறனை பொளந்த விஜய் ஆண்டனிக்கு தரமான பதிலடி.!!
Vijay Antony attack bule sattai maran
நடிகர் விஜய்ஆண்டணி நடித்துள்ள திரைப்படம் ரோமியோ. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியானது.
இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளிவந்த ரோமியோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அநேக திரையரங்குகள் காலியாகவே காட்சி திரையிடப்பட்டது.
திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் இப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனை, தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நல்ல திரைப்படங்களை விமர்சித்து கொல்லும் திரு.புளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு.
இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி ரோமியோ போன்ற நல்ல திரைப்படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறைசொல்லும் அறிவுஜீவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பேரன்பு மிக்க மக்களே ரோமியோ திரைப்படம் நல்ல படம் போய் பாருங்கள் புரியும். என்று கூறியுள்ளார்.
English Summary
Vijay Antony attack bule sattai maran