விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதம்' திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நினையில் 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர்  தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி 'ஹிட்லர்' என்ற புதிய படத்தில்  நடித்துள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antonys new film release date announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->