விஜய் ரசிகர்களே ரெடியா..விஜயின் கில்லி படத்தை தொடர்ந்து சச்சின் படமும் ரீரிலீஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழில் வெளியான வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிடு செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா,பாபா கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் தனுஷின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் விஜயின் கில்லி படமும் தமிழ்நாடு முழுவதும் அதிக திரையரங்களில் திரையிடபட்டு தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கும் கில்லி திரைப்படம் ரூ.25 கோடிக்கு மேலாக வசூல் செய்துள்ளது. கில்லி படத்தை தொடர்ந்து விஜயின் வில்லு படமும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் விஜய் நடித்த சச்சின் படத்தையும் டிஜிட்டலில் துப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

சச்சின் படம் 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் டைரக்ட் செய்ய கலைப்புலி தானு தயாரித்திருந்தார் .சச்சின் சிறந்த காதல் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அதிக நாட்கள் ஓடி நல்ல வசூல் பெற்றது. 19 வருடங்களுக்குப் பிறகு சச்சின் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sachin film rerelease


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->