விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம்! மகாராஜா ரிலீஸ் அப்டேட்!! - Seithipunal
Seithipunal


விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள்ளது. நடிகர் விஜய் சேதுபதி எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி வெண்ணிலா கபடி குழு , புதுபேட்டை போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரமாக நடித்து ,பின்னர் முதன்மை நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் சேதுபதி . ரஜினியின் பேட்ட , விஜயின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான மகாராஜா திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்ததின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ,நட்டி , முனிஷ்காந்த் ,சிங்கம் புலி , இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மகாராஜா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே கவனம்பெற்ற நிலையில், விஜய்சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14ம் தேதி திரையங்குக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi 50th film Maharaja Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->