100 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா - பாக்ஸ் ஆபிசில் இடம் பிடிக்குமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. அன்றைய நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். 

இந்தப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு தெலுங்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இந்தப் படம்  உலகளவில் நேற்றுவரை 82 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi in maharaja movie reached soon 100 crores collection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->