அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலி கார் விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி. இவர் தற்போது முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானதாகவும், சீட் பெல்ட் போட்டிருந்ததாலும், ஏர் பேக் சரியாக வேலை செய்தாலும் தான் உயிர் தப்பிதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay tv actress vaishali accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->