மலைவாழ் மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த விஜய் டிவி பிரபலம்.. பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பாலா. இவர் தற்போது சினிமாவிலும் கால்தடம் பதித்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பது மட்டுமில்லாமல், தான் சம்பாதிக்கும் பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதன்படி நிறைய மாணவர்களை தனது சொந்த செலவில் இலவசமாக படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கடம்பூர் குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமத்தில் 8000 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்த மலை கிராமத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ 16 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வர வேண்டும்.

இதை அறிந்ததும் இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்காமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெற்ற சம்பளத்தை சேர்த்து வைத்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளேன். இது எனது இரண்டாவது ஆம்புலன்ஸ் வாகனமாகும்.

இதேபோல் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களுக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனம் எனது சொந்த செலவில் வாங்கி தர முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay TV Bala free ambulance to mountain peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->