விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் காமெடியன் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பொது மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

மேடை கலைஞராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய விடா முயற்சியினால் விஜய் டிவியின் பிரபல காமெடியனாக திகழ்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போதைய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில் அவரது நிச்சயதார்த்தம் தற்போது நடந்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் பெண்ணின் முகத்தை காட்டாமல் மோதிரம் அணியும் புகைப்படங்களை மட்டும் நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay TV comedian nanjil vijayan get engaged


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->