முதலைக்கறி சாப்பிட்டு விட்டு ரிவ்யூ கொடுத்த விஜய் டிவி கோபிநாத்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி தொகுப்பாளரான கோபிநாத் முதலை கறி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய பேச்சு மற்றும் அறிவுரைகளுக்கே தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இவருடைய சமூக வலைதளங்கள் பக்கங்களில் அறிவுரை கூறும் விதமாக வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் அதில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கே முதலைக்கறியை வாங்கி சாப்பிட்டுள்ளார். முதலில் முகம் சுளித்த நிலையில் சாப்பிட தொடங்கிய கோபிநாத் முதலைக்கறியின் சுவை மிகவும் சூப்பராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் பலரும் முதலைக்கறியா? என்று  கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay tv gopinath ate crocodile meat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->