'இதை தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை': கண்ணீர் மல்க எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல்! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்து விட்டார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அதன்படி, நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

'எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போது சந்தித்து ஆர தழுவி கட்டி அனைத்து முத்தமிட வேண்டும் என ஆசைப்பட்டேன். 

அதற்காக நான் 2 ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது உயிரற்ற உடலை பார்க்கக் கூடாது என கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரை பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். 

இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன். அரசியல் உலகிலும் சரி, திரை உலகிலும் சரி விஜயகாந்த் சகாப்தம் படைத்தவர். இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதை தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை. 

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth death Chandrasekhar condolence note


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->