நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாதவன் மகன்.. விஜயகாந்த் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர்  மாதவன் இவருடைய மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். இவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற மாதவன் மகன் வேதாந்த் 50மீ, 100மீ, 200மீ, 400மீ மற்றும் 1500மீ ஆகிய 5 பிரிவுகளில் பங்கேற்று 5 பிரிவுகளிலும் வெற்றி பெற்று 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இதனை நடிகரும், அவரது தந்தையுமான மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நடிகர் மாதவனின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும், அரசியல்வாதிகமான கேப்டன் விஜயகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் 17 வயது மகன் வேதாந்த்   50, 100, 200, 400 & 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 மேலும் ஒலிம்பிக் உள்ளிட்ட உலக அளவில் நடைபெறும்  போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth wishes to Madhavan son vedhanth won 5 gold medals in swimming


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->