விஷால் நடித்துள்ள ‘லத்தி’ படத்தின் ட்ரைலர் வெளியானது.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

 இதில் லத்தி திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்க சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள நிலையில்,  தற்போது லத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal in Lathi movie trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->