அச்சச்சோ... ஆக்சிஜன் மாஸ்குடன் சமந்தா.! ரசிகர்கள் ஷாக்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு மையோஸைட்டிஸ் ளன்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டே படப்பிடிப்புகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இவரது நடிப்பில் உருவான சாகுந்தலம் என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகியது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் குஷி என்ற படத்தில்லும் சிட்டாடல் என்ற இணையதளத் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா. இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது நோய்க்காக ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையை எடுத்து வருகிறார் சமந்தா. இந்த சிகிச்சை வீக்கத்தை குறைக்கவும் நோய் தொற்றை கட்டுப்படுத்தவும் உதவும் என்று  மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சையானது கடினமான சூழலில் அதிகப்படியான ஆக்ஸிஜனை செலுத்துவதன் மூலம் கீழுள்ள நுரையீரல் அதிகமான ஆக்ஸிஜனை தக்க வைத்துக் கொள்ளவும். செல்களின் வளர்ச்சியை தூண்டவும் உதவும் என அறியப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what happened to samantha fans shocked by his new photo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->