இரவில் மழை பெய்யும் பொழுது நிலவும் நட்சத்திரங்களும் ஏன் தெரிவதில்லை.?! - Seithipunal
Seithipunal


இரவில் மழை பெய்யும் பொழுது நிலவும், நட்சத்திரங்களும் ஏன் தெரிவதில்லை?

மழை வருவதற்கு வானில் மேகங்கள் சூழ்ந்து இருக்க வேண்டும். மேகங்கள் பூமியின் மேற்பரப்புக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட தொலைவில் காற்று மண்டலத்தில் உலவுகின்றன. ஆனால் நிலவும், நட்சத்திரங்களும் பூமிப்பந்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. எனவே மேகங்களால் அவை மறைக்கப்படுகின்றன. மழை பெய்யும் பொழுது நிலவும், நட்சத்திரங்களும் தெரியாமல் போகின்றன.

கால் விரலில் நகம் சொத்தை வருவதற்கான காரணம் என்ன?

கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது.

காலணிகள் அணிவதால் மட்டும் கால் விரல் நகம் சொத்தை ஏற்படுவதில்லை.

சொத்தைக்கான காரணம் :

குறிப்பாக காலில் செருப்பு அணியாமல் நடப்பது, மற்றவர்கள் செருப்பை போட்டுக் கொள்வது மற்றும் கால் விரல் நகம் சொத்தை உள்ளவர்களின் செருப்பை அணிந்துக் கொள்வது போன்ற காரணங்களால், கால் விரல் நகம் சொத்தை ஏற்படுகிறது.

கால் விரல் நகம் சொத்தை ஏற்பட்டவுடன் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மற்ற விரல்களையும் பாதித்து விடும்.

ஆரம்ப காலத்திலேயே கவனித்து தகுந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்

மலைப்பகுதிகளில் பனிக்கால இரவுகளில் நீர் குழாய்கள் உடைவது ஏன்?

மலைப்பகுதிகளில் வெப்பநிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாக ஆகிவிடும். இதன் காரணமாக குழாய்களுக்குள் இருக்கும் நீரானது உறைந்து பனிக்கட்டியாகிவிடும். அவற்றின் கனஅளவு அதிகரித்து விடும். அதனால் குழாய் சுவர்களில் அதிக அழுத்தத்துடன் மோதும் போது குழாய்கள் உடைந்து விடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why moon and stars Did not show while raining


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->