ஐயோ பாவம்! 'எனது கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவேன்'...!!! - நஸ்ரியா - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை 'நஸ்ரியா' தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா உள்பட பல படங்களில் நடித்து தமிழ்திரையுலக சினிமாவில் பிரபலமானவர்.

இவர் தொடர்ந்து மலையாள திரை உலகிலும் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.மேலும் பிரபல மலையாள நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வரும் நஸ்ரியா, சினிமா, பொதுநிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் மிகுந்த நேரம் செலவழித்து வருபவர்.

இதனிடையே, சில மாதங்களாக நஸ்ரியா சினிமா, சமூக வலைதளங்கள் என எந்த தொடர்பில்லாமல் காணாமல் போனார்.இதுதொடர்பாக நேற்று 'நஸ்ரியா பகத்' தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

நஸ்ரியா பகத்:

அதில் அவர் கூறியதாவது,"நான் ஏன் இவ்வளவு நாள் வெளியே வரவில்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். சினிமா உள்பட என்னை சார்ந்த அனைவரோடும் தொடர்பில் இருப்பேன்.

ஆனால் கடந்த சில மாதங்களாக உணர்வுப் பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும் சில பிரச்சனைகளையும், கஷ்டத்தையும் சந்தித்தேன்.என் 30-வது பிறந்தநாள், புத்தாண்டு, நான் நடித்த 'சூக்ஷூமதர்ஷினி' படத்தின் வெற்றி என எல்லாவற்றையும் நான் கொண்டாட தவறி விட்டேன்.

யாருடைய செல்போன் அழைப்பையும், குறுஞ்செய்தியையும் நான் எடுக்கவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவேன்.

அதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது நஸ்த்ரீயா ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

will recover from my difficult situations Nazriya


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->