#Justin: பிரபல திரைப்பட பாடலாசிரியரின் மகளும் எழுத்தாளருமான தூரிகை தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரின் மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பிரபல பாடலாசிரியராக அறியப்படும் கபிலர் தமிழ் திரையில் நிறைய திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர். இவர் ஜீவாவின் யான் திரைப்படத்தில் வரும் ஆத்தங்கர ஓரத்தில் என்ற பாடலை எழுதியதன் மூலம் சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றுள்ளார். 

இவருக்கு தூரிகை என்ற மகள் இருக்கின்றார். இவர் பல்வேறு இதழ்களில் எழுதிய தனது கட்டுரைகள் மூலம் பிரபலமடைந்தவர். ஓரிராண்டுகளுக்கு முன் இவர் சொந்தமாக, 'Being women' ஒரு மின் இதழை துவங்கினார். 

இத்தகைய சூழலில், எழுத்தாளர் தூரிகை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Writer doorika commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->