வழக்கு விசாரணைக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்த யாஷிகா! பிடி வாரண்ட் போட்டு ஆஜராக வைத்த கோர்ட் ! - Seithipunal
Seithipunal


சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலமாக ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  இவர் ஓட்டிச் சென்ற கார் மகாபலிபுரத்தில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்துடன் காரில் சென்ற அவரது உயிர் தோழி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் போது படுக்காயமடைந்த யாஷிகா ஆனந்த் சில மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்தார்.

சமீபத்திய ஒரு பேட்டியின் போது கூட தன்னுடைய வேகத்தினால் தான் அந்த விபத்து நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்த அவர் இனி வாகனம் ஓட்டுவதையே கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த விபத்து தொடர்பாக  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இவர் வழக்கில் ஆஜராகாததால் செங்கல்பட்டு நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆஜரானார் யாஷிகா ஆனந்த்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

yashika anandh attend the hearing of an accident case in 2021


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->