தூக்குதுரை படத்தில் இரண்டு கெட்டப்புகளில் வரும் பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


தூக்குதுரை படத்தில் இரண்டு கெட்டப்புகளில் வரும் பிரபல நடிகை.!

ட்ரிப்’ இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருடன் இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 

மனோஜ் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இந்தபடம் குறித்து இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தெரிவித்ததாவது, “மூன்று விதமான காலங்களில் இந்த கதை நடக்கிறது. 

18-ம்நூற்றாண்டு கால கதையை அனிமேஷனில் சொல்கிறோம். 1999 மற்றும் தற்போதைய காலகட்டங்களில் தான் கதை நடக்கிறது. அரசப்பரம்பரை குடும்பம் ஒன்றின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஓர் ஊர் உள்ளது. அவர்கள் தலைமையில் கோயில் திருவிழா நடக்கிறது. 

அந்தக் கோயிலில் இருக்கும் பழங்கால கிரீடம் ஒன்றைத் திருடுவதற்காக கும்பல் செல்கிறது. அங்கு அவர்கள் என்ன பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை. 

காமெடி மற்றும் த்ரில்லர் கதையாக இது இருக்கும். இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் இனியா இருவரும் இரண்டு கெட்டப்புகளில் வருவார்கள். இந்தப் படமே வித்தியாசமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yogi babu and iniya dual role in thookuthurai movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->