உலக யோகா தினம்.. யோகா செய்யும் போது இந்த தவற்றையெல்லாம் செய்யாதீர்கள்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நம்முடைய முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்க்கையை மேம்படுத்தும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்த கலை யோகாகலை. யோகாசனம் நம்மை வழிப்படுத்தும், உடலினை உறுதி செய்யும், மனிதனை அமைதிப்படுத்தும்.

அந்த வகையில் உடலுக்கு நன்மை கொடுக்கும் யோகாசனம் அதிகாலைப் பொழுதில் செய்வது மிகவும் நல்லது. தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமாக வாழ நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்திருக்கும் பொக்கிஷமான கலை தான் யோகாசனம்.

ஆனால் சிலர் யோகா பயிற்சியின்போது தவறுகளை செய்கின்றனர். அது உடலுக்கு பயனளிக்காமல் தீங்கு விளைவிக்கும். எனவே யோகா மேற்கொள்ளும் போது என்னென்ன தவறுகளை நாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

யோகாசனம் செய்யும்போது பாடல் அல்லது இசையை கேட்டுக் கொண்டு செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் மன அமைதி கிடைக்காமல் நாம் இசையில் மூழ்கி விடுவோம். அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாது. உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் யோகாசனம். அதனால் அமைதியான சூழலில் யோகாசனம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக யோகாசனம் அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தான் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக 8 வயதுக்கு குறைவான குழந்தைகள் யோகாசன பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை குழந்தைகள் தானாக முன்வந்து ஆர்வம் காட்டினால் பெற்றோர்களின் கண்காணிப்பில் எளிமையான யோகாசனங்களை கற்றுக் கொடுக்கலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't do it some activities in yogasanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->