கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் சுவாரசியமான, ஆச்சர்யமளிக்கும் முழு தோற்றமும், அறிய புகைப்படங்களும்! தவறவிடாதீர்கள்!
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் சுவாரசியமான, ஆச்சர்யமளிக்கும் முழு தோற்றமும், அறிய புகைப்படங்களும்! தவறவிடாதீர்கள்!
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொன்றை பற்றியும் வெவ்வேறு விதமான பார்வையும் கருத்துக்களும் ஏற்படும். வரலாற்றை பற்றியே வாழ்ந்ததாலோ வரலாற்று புதினங்களை படித்த தாக்கத்தினாலோ கோவிலாக இருப்பினும் கோட்டைகளாக இருப்பினும் அது ஏற்படுத்தும் வியப்பும் பரவசமுமே முன் நிற்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் நுழையும் போதெல்லாம் சமகாலத்தில் வாழும் மனிதர்களின் பண்பு நலன்களும் ஒரு போராட்டத்தை பகடி செய்து அசிங்கப்படுத்தும் குணமும் , எதன் பொருட்டும் ஒன்று கூடாத மனிதர்களை கொண்ட என் இனமும் ஞாபகத்தில் வரும். இப்படியான மனிதர்களை கொண்ட சமூகத்தில் உள்ள இதே மனிதர்களின் முன்னோர்களை கொண்ட படையை நடத்தி தானே கங்கையும் கடாரமும் கொண்டார் இராஜேந்திரர் என்ற பெருமூச்சு எழும்.

கோவிலின் பிரமாண்டமும் அதன் பின் உள்ள மனிதர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அகக்கண்ணில் காட்சிகளாக விரிய ஒன்றுமே யோசிக்க வராது. மனம் திகைத்து ஒரு ஓரமாக புல்வெளியில் படுத்துக்கொண்டு சோழீஸ்வரத்தின் விமானத்தை கண் கொட்டாது பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தன் கவனத்தை கலைத்து சிந்தனையை செலுத்தியுள்ளார். முன்புறம் உள்ள மண்டபமும், முதல் இரு தளமும் இடிக்கப்பட்டோ, இடிந்தோ மறு சீரமைப்பு எந்த காலத்திலோ செய்திருக்கிறார்கள். அதோ அந்த விமானத்தின் அருகே உள்ள கட்டுமானம் போலவே தான் முழுவதும் இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துள்ளார். அந்த சிந்தனையை முழுமையாக இருந்திருந்தால் எப்படியிருக்கும் என கணிணினியில் உருவாக்கி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இன்றிருப்பதே மனமும் கண்களும் நிறைக்கும் பேரேழிலோடு இருக்க அதே விதமான கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் அது இருந்திருந்தால் அவற்றை கண்டு விட்டு அந்த வளாகம் விட்டு வெளியேறுதல் இயலாத காரியமாகவே இருக்கும்.

தற்போது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலினை பல கோணங்களில் ஆகாயத்தில் இருந்து புகைப்படங்களாக எடுத்துள்ளது கண்கவரும் விதமாக உள்ளது. இதனை பார்த்த அனைவருக்கும் இத்தனை அழகா என்ற வியப்பு எழாமல் இல்லை.
கட்டுரையாளர் , படங்களுடன் : பராந்தகன் தமிழ்செல்வம் அவர்களுக்கு நன்றி!
English Summary
Gangai konda cholapuram Temple new view