சிற்பங்களின் அழகு..வரலாற்றை நினைவு கூறும்... குடுமியான் மலை..!
kudumiyan malai special in pudhukottai
புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து ஏறத்தாழ 67கி.மீ தொலைவிலும் சிற்பங்களில் புகழ்பெற்ற குடுமியான் மலை அமைந்துள்ளது.
சிறப்புகள் :
குடுமியான் மலை அழகான இயற்கை சூழலில் மலைக்குன்றுகளைச் சுற்றி அமைந்துள்ளதால் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.

இங்கு சென்றால் இயற்கையில் அமைந்துள்ள குகைக் கோவில்கள், குடைவரைக் கோவில்கள் உள்ள பழங்கால வரலாறுகள் மற்றும் கலையைப் பற்றி தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
இங்கிருந்து சிறிது தூரம் நடைப்பயணமாக சென்றால் மலைக்குன்றின் மேல் சிவபெருமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலைச் சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவர் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
குடுமியான் மலையின் முகப்பு பகுதியில் இந்திய இசை வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த, நாம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும் இசை கல்வெட்டுகள் அமைந்திருக்கின்றன.

இந்த மலையில் அமைந்துள்ள சிற்பங்களின் அழகுகள் நம்முடைய மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அவற்றில் ஒன்றாக சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கும் சிற்பங்களை நாம் கண்டுக்களிக்கலாம்.
இங்கு சிற்பங்கள் மலைமீது வரிசையாக இருப்பதை பார்க்கும்பொழுது நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
குடுமியான் மலையில் புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது. நாம் இவற்றின் கட்டிட அமைப்புகளைப் பார்த்து கண்டு ரசிக்கலாம்.
English Summary
kudumiyan malai special in pudhukottai