தலைவி, தலைவன் மேல் கொண்ட காதலைப் பற்றிப் பாடும் இலக்கியம்….!
தலைவி, தலைவன் மேல் கொண்ட காதலைப் பற்றிப் பாடும் இலக்கியம்….!
தலைவி, தலைவன் மேல் கொண்ட காதலைப் பற்றிப் பாடும் இலக்கியம்….!
சூரியன், சிவப்பு நிற ஆடையை உடுத்திக் கொள்ளும், பொன்னான நிற வானத் தோற்றத்தில் உடைய மாலைப் பொழுதில், தலைவியானவள், தன் தோழியருடன், சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டு நகரில் நடந்து கொண்டிருக்கிறாள்.
அப்படி, வயதுப் பெண்கள், சிரி்த்தபடி, மகிழ்ச்சியாகச் செல்வதை, வழிப்போக்கர்கள் எல்லாம், திரும்பிப் பார்த்தபடி செல்கின்றனர். அந்தப் பெண்கள், அவர்கள் யாரையும் கண்டு கொள்ளவில்லை.
ஆனால், அந்த நேரத்தில், அந்தி சாயும், ஞாயிற்றுக் கீற்றுகளின் செம் பொன் நிறம், அங்கு உலா வந்த தலைவனின் மேனியில் பட்டுத் தெரித்தது. அவன் சாவகாசமாக உலா வந்து கொண்டிருந்தான்.
அது வரை, மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த, அந்த ஏழு பருவப் பெண்களும், தலைவனின் அழகைத் தங்கள் கண்களால் பருகினர். அது வரை, வாய் மூடாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள், வாய் திறக்காமல் மௌனியானார்கள்.

அந்த ஏழு பேரில், தலைவியானவள், அந்த தலைவனை எண்ணி, காதலில் உருகினாள். அவன் நினைவாகவே இருந்தாள். நீர், கதவு, கண்ணாடி, உணவு, செடி, கொடி, தேர், குதிரை என எதைப் பார்த்தாலும், அதில் அவன் உருவம் தான் தெரிந்தது.
தலைவியின் தாபத்தினை அறிந்த தோழிகள், மலைக் குறத்தியை அழைத்து வந்தனர். அவள், தலைவனின் தேசத்தைப் பற்றியும், அவனது பெருமைகளைப் பற்றியும், தலைவியிடம் குறி சொல்வது போல், உருவாக்கப்பட்ட இலக்கியம் தான், “குறவஞ்சி”.
தன் மனக் குறையைப் போக்கிய குறத்திக்கு, வெகுமதி அளிக்கிறாள் தலைவி.
குறத்தி வந்து சொல்லும் நடை பாணியில், இந்த இலக்கியப் பாடல்கள் அமைந்துள்ளன. கி.பி.17 முதல் 19-ஆம் நுாற்றாண்டு வரை, இந்த குறவஞ்சி இலக்கியங்கள், உருவாகி உள்ளன. இது வரை 43 குறவஞ்சி நுால்கள், தமிழகத்தில் கிடைத்துள்ளன.
மதுரை ராஜா -