ஓணம் பண்டிகை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு..! தேவஸ்தானம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13ம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலை கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். சிறப்பு கால பூஜைகளில் இந்த கோவிலில் கூட்டம் அலைமோதும். 

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவிலில் நடை திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி 
கோவிலின் நடையை திறந்து வைப்பார் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருவோணத்தை முன்னிட்டு 15ஆம் தேதி திருவோணம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஓணம் பண்டிகை முன்னிட்டு பக்தர்கள அனைவருக்கும் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஓணம் சிறப்பு விருந்து வழங்கப்படும்.

தொடர்ந்து புரட்டாசி மாதம் வர உள்ளதால், புரட்டாசி பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை நடத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதி மூலம் முன்பதிவு செய்து சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala walk opening on 13th ahead of Onam festival Devasthanam announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->