10ம் வகுப்பு தேர்வில் தோல்வியா..? கவலை வேண்டாம்.!! ஜூன் மாதத்தில் துணைத்தேர்வு.!!
10th Class Supplementary exam will be held in June
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் மாணவிகள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 23,971 பேர் தேர்ச்சி பெறவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே 23ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
10th Class Supplementary exam will be held in June