10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மாணவர்களுக்கு.. இன்று முதல் ஹால் டிக்கெட்.. தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜீன்  மாதம் வெளியான நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 

அதன்படி, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class supplementary examination Hall ticket from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->