அத்துமீறும் இலங்கை கடற்படை - தமிழக மீனவர்கள் 13 பேர் கைது.!
13 tamilnadu fisherman arrested
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன் படி இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 13 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் சிறைபிடித்தது.

தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்தபோது தப்பி செல்ல முயன்ற இரண்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முனைப்பு தமிழகத்தை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
13 tamilnadu fisherman arrested