அச்சுறுத்தும் ஜி.பி.எஸ். நோய் ...மராட்டியத்தில் 101 பேர் பாதிப்பு,ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


புனேயில் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது. இதில் 68 பேர் ஆண்கள். 33 பேர் பெண்கள்என மேலும் இவர்களில்  16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 சமீபத்தில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கிலான் பாரே சின்ட்ரோம்' நோய் தொற்று மராட்டிய மாநிலம் புனேயில் பரவி வருகிறது. மனித உடலின்  ஆரோக்கியமான செல்களை தாக்குவதால், இந்த நோய் 'ஆட்டோ இம்யூன்' என அழைக்கப்படுகிறது. இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இந்த நோயின் ஒருவகை தான் ஜி.பி.எஸ். ஆகும். 

இந்தநிலையில் ஜி.பி.எஸ் நோய் பாதிப்பால் சோலாப்பூரில் ஒருவர்  உயிரிழந்து உள்ளார். 40 வயதான அந்த நபருக்கு   மூச்சுத்திணறல், கீழ் மூட்டுகளில் பலவீனம், உடல் சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து சோலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர்  நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். முதல்கட்ட சோதனையில் அவர் ஜி.பி.எஸ். நோயால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே புனேயில் சுமார் 101 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புனேயில் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது என்றும்  இதில் 68 பேர் ஆண்கள். 33 பேர் பெண்கள். இவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்  சோலாப்பூரை சேர்ந்த ஒருவர் பாதிப்பால் உயிரிழந்து உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசுத்தமான தண்ணீரால் ஜி.பி.எஸ். பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் டாக்டர்கள் குழுவினர் மராட்டியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்என்றும்  அவர்கள் புனேயில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில சுகாதாரத்துறை மந்திரி பிரகாஷ் அபித்கர் நோய் பாதிப்பு குறித்து புனே சிங்காத் ரோட்டில் உள்ள நாந்தெட் கிராம கிணற்றில் ஆய்வு செய்தார் என்றும் அங்கு இருந்து தான் அருகில் உள்ள கிராமங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Intimidating GPS Sickness101 cases, one death in Maharashtra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->