11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "வாழ்க்கையை சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் சான்று. நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள்". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது,

"கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியானதாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையுடன் உள்ளது.

இதனை அடுத்து, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை கட்டாயம் தொடரும். இதில் குழப்பம் வேண்டாம். தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற காரணத்தால் தான் 11‌-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th public exam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->