மத்திய பல்கலைக்கழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்..அராஜகத்தில் துணை வேந்தர்..!
Bribery at Central University ViceChancellor in anarchy
அண்மைக்காலமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டத்திற்கு புறம்பாகவும் பல்கலைக்கழக மானிய குழுவின் அதிகாரத்திற்கு எதிராக துணை வேந்தர் செயல்படுவதாக பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நல சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நல சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சுப்ரமணியம்கேள்வி எழுப்பி உள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்: அண்மைக்காலமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டத்திற்கு புறம்பாகவும் பல்கலைக்கழக மானிய குழுவின் உடைய அதிகாரத்திற்கு எதிராகவும் புதுச்சேரி அரசை அலட்சியப்படுத்தும் விதமாகவும் துணை வேந்தர் உடைய நடவடிக்கை அமைந்திருக்கின்றது. இதை எந்த அரசியல் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் சரியாக கையாள தவறிவிட்டது என்று தோன்றுகிறது .இந்திய அளவில் மத்திய பல்கலைக்கழகம் 43 இருக்கிறது .இதில் அப்ளியேஷன் கெபாசிட்டி என்று சொல்லக்கூடிய கல்லூரிகளை அங்கீகரிக்க கூடிய அதிகாரத்தை தானே அராஜகமான முறையில் அமைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளிடமும் அரசுக்குத்தோடு நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பண வேட்டையிலும் முறையற்ற வகையில் நடந்து கொள்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு கட்டுப்பட்டு அதனுடைய வழிகாட்டுதல் படி தான் நடக்க வேண்டும் என்பது விதி ஆனால் புதுச்சேரியில் உள்ள துணைவேந்தர் பல்கலைக்கழக மானியக் குழுவின் உடைய வழிகாட்டுதலை மதிக்காமலும் பின்பற்றாமலும் நடந்து கொள்வதால் பலமுறை பல்கலைக்கழக மானிய குழு தனது கண்டனத்தை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தருக்கு தெரிவித்து இருக்கிறது.
ஆனால் தொடர்ந்து பல்கலைக்கழக மானிய குழுவின் உடைய அறிவுறுத்தலுக்கு எதிராக நடந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்த பிறகும் இதுவரை தனது தவறை திருத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் பல்கலைக்கழக மானிய குழுவின் நூடைய நிதி ஆதாரத்தை இழக்க கூடிய நிலை வந்தால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டணங்கள் பல மடங்கு உயரம் இதனால் பாதிக்கப் போவது புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளும் மாணவர்களும் தான் என்பதை உயர்கல்வித்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தால் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மிக சொற்பமே அதையும் துணைவேந்தர் போன்ற அராஜகவாதிகளும் அவருக்கு துணை நிற்கக்கூடிய அதிகாரிகளும் களையும் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்.
இவர்களை விட்டு வைத்தால் புதுச்சேரியினுடைய உயர்கல்வி பாதிக்கப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை இதற்கெல்லாம் ஒரே தீர்வாக புதுச்சேரி அரசு மாநில பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டியது கடமை. ஆனால் நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதற்கு நம்மிடம் போதிய நிதி வசதி இல்லை என்று தவறான அறிவுறுத்தலினால் புதுச்சேரி மக்களுடைய நலனை புறக்கணிக்கின்றார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை ஏற்கனவே அங்கீகாரம் கொடுக்கப்பட்ட படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் அளித்த அங்கீகாரத்தை அடிப்படையாக நம்பி புதுச்சேரி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்த பின் அம் மாணவர்களுக்கான தற்காலிக சான்றிதழை பிரவீசல் சர்டிபிகேட் என்று சொல்லக்கூடிய சர்டிவிகேட்டை தராமல் இழுத்தடித்துக் கொண்டு நம் மாணவர்கள் எங்கும் வேலைக்கும் செல்ல முடியாமல் தங்களது படிப்பை மேலும் தொடர முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருப்பதை புதுச்சேரி துணைவேந்தர் அராஜகமான முறையில் நடந்து கொண்டிருக்கின்றார்.
பல்கலைக்கழக மானியக் குழு ஒரு படிப்பிற்கான அதிகாரத்தை கொடுத்த பிறகு அந்த படிப்புக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் கட்டடத்தையோ அல்லது வேறு எந்த விதத்திலும் பணம் வாங்க கூடாது என்பது விதி அப்படி இருந்தும் தனக்கு 75 லட்சம், மூன்று கோடி, இரண்டு கோடி புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு கல்லூரியும் நிர்பந்தப்படுத்தி அதன் மூலமாக கல்லூரிகளை பழிவாங்குவதோடு மட்டுமல்லாமல் வேறு வகையிலும் லாபம் பார்க்கக் கூடிய வேலைகளிலே துணைவேந்தரும் அவருடைய ஆட்களும் நடந்து கொள்கிறார்கள் இது அனைத்தையும் தட்டிக் கேட்கக் கூடிய அதிகாரம் நமது முதல்வருக்கோ அல்லது புதுச்சேரி மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு கூட இல்லை என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து இருந்தாலும் நம் மாணவர்களுக்கு இடைக்காலச் சான்றிதழை கொடுக்காமல் 2500 ரூபாய் தக்கல் முறையில் கொடுத்தால் மட்டுமே பட்டமும் சேர்த்து வழங்குவேன் என்ற அதிகாரத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் கொடுத்தது யார்?
தொழில் ரீதியான படிப்பு என்று சொல்லக்கூடிய டாக்டர்கள் மற்றும் வக்கீல்கள் நேரத்தோடு பதிவு செய்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய தொழிலைச் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்காலிக சான்றிதழ் என்பது மிக முக்கியமானது என்று கூட தெரியாமல் அவர்களை இழுக்கடிப்பது என்பது மிகவும் வேதனைக்கான ஒரு விஷயமாகும். மாணவர்களை படிப்பை முடித்தால் தேர்வு கட்டணத்தோடு தான் தற்காலிக சான்றிதழ் பட்டம் ஆகியவற்றிற்கு பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு தான் இறுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் அப்படி இருந்தும் பணம் ஒன்றே குறிக்கோள் என்று மாணவர்களிடம் அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பணம் வாங்குவது என்பது வழிபறி கொள்ளையன் அடித்து பிடுங்குவதை போன்று இருக்கிறது.
இதையெல்லாம் கட்டிக் கேட்டால் கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கையில் துணைவேந்தர் ஈடுபடுகிறார். ஒரு கல்லூரிக்கு பல பிரிவுகளில் வகுப்புகள் தொடங்குவதற்கு அங்கீகாரம் அளித்த பிறகு அதிலே ஒரு சிலதை மட்டும் ஏற்றுக் கொண்டு ஆம் மாணவர்களுக்கான இடைக்கால சான்றிதழ் கொடுப்பதும் எந்தவிதமான காரணமும் இல்லாமல் சில படிப்புகளுக்கு இடைக்காலைச் சான்றிதழை கொடுக்க மறுக்கின்றேன் என்று கூட எழுத்து மூலமாக கொடுக்காமல் மாணவர்கள் நான்கு மாதங்களாக அலைகழித்துக்கொண்டு அல்லல் படுத்தி அராஜகமாக நடந்து கொள்ளும் துணைவேந்தருக்கு சாதகமாக சில சாதிய சங்குகளும் சாதிய அமைப்புகளும் துணை நிற்பது மற்ற வகுப்பினர் அதனை வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவது என்பது மிகவும் கீழ்த்தரமான ஒன்று ஆகவே பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்கள் மற்றவர்களை மிரட்டி பணம் வசூல் செய்யும் வேலையை விட்டு விட்டு பல்கலைக்கழக முன்னேற்றத்திற்காக அவர் பணியாற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் இது சம்பந்தமாக எங்களது சங்கம் ஜனாதிபதி திருமதி முருமுவை சந்தித்து புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆவல நிலையை நாங்கள் எடுத்துக் கூறுவதோடு மட்டுமல்லாமல் இதற்கான சட்ட தீர்வை மேற்கொள்வோம் புதுச்சேரி மாணவர்களுடைய நலனை பாதுகாப்போம் என்று எங்களது சங்கம் ஒருமனதாக முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
இது சம்பந்தமாக புதுச்சேரி அரசு மற்றும் உயர்கல்வித்துறை மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கக்கூடிய நமது மாண்புமிகு சபாநாயகர் செல்வம் அவர்களையும் சந்தித்து இப் பிரச்சினையை பற்றி விளக்கிக் கூற இருக்கின்றோம் ஆகவே புதுச்சேரி மக்களுடைய, மாணவர்களுடைய நல்லனை காக்கும் விதமாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இப்ப பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இது சம்பந்தமாக அனைத்து கட்சியினுடைய உதவியும் நாட இருக்கின்றோம் என்பதோடு புதுச்சேரி மாணவர்களுடைய நலனில் என்றும் அக்கறை கொண்டு பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நலச்சங்கம் அனைத்து விதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளும்
English Summary
Bribery at Central University ViceChancellor in anarchy