சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 09 முதல் 12-ஆம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிவிப்பு..!
CBSE announces new syllabus for classes 9 to 12 in schools
2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் வகையில், சி.பி.எஸ்.சி. இல் 09 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

09-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இந்த புதிய பாடத்திட்டம் வழங்குகிறது. ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் இணக்கமாக பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவக் கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்களை https://cbseacademic.nic.in/curriculum_2026.html என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
English Summary
CBSE announces new syllabus for classes 9 to 12 in schools