மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு! நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!
Central Universities entrance exam applications date
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட நுழைவுத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 54 பேர் கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர 'கியூட்' எனப்படும் பொது நுழைவுத்தேர்வு புதியதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்காக இணையதள பதிவு கடந்த 2ஆம் தேதி துவங்க இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இணையதளம் மூலம் நாளை முதல் மே மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் நுழைவு தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம், அஸ்ஸாமி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central Universities entrance exam applications date