ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்!
Erode East DMK NTK Candidate Nomination 2025
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த இடைத்தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக் கழகம், தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட களமிறங்கியுள்ள திமுக, வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவித்துள்ளது. திமுகவை எதிர்த்து களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, வேட்பாளராக சீதாலெட்சுமியை அறிவித்துள்ளது.
இருமுனை போட்டியாக உள்ள இந்த இடைத்தேர்தல் களத்தில் நாளை திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.
English Summary
Erode East DMK NTK Candidate Nomination 2025