சட்டப் படிப்புகளுக்கான கிளாட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!
CLAT Entrance Exam date announced
மத்திய அரசின் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர கிளாட் (common law admission test) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்ட படிப்புகளில் சேர கிளாட் எனும் பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) மாணவர் சேர்க்கையான கிளாட் தேர்வு வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ.4,000 மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ.3,500 என் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்" என அறிவித்துள்ளார். கிளாக் தேர்வு குறித்தான சந்தேகங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
English Summary
CLAT Entrance Exam date announced