இளைஞர்களே தயாரா... திண்டுக்கல்லில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..! மிஸ் பண்ணிடாதீங்க...!
Dindigul private employment camp on April 21
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3ஆம் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அந்தவகையில், வருகின்ற 21ஆம் தேதி காலை 10.30-மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்படுகிறது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஜெராக்ஸ்-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும்.
மேலும், விபரங்களுக்கு 0451-2904065 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
English Summary
Dindigul private employment camp on April 21